பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாயில் கிராவல் மண் அள்ள எதிர்ப்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கருமாத்தூர் : கருமாத்துார் அருகே கருகப்பிள்ளை கண்மாயில் மண் அள்ளும் இயந்திரத்துடன் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றினர். இதுகுறித்து கிராம மக்கள் உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி, ஆர்.டி.ஓ., ராஜ்குமார், செக்கானூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.ஆர்.டி.ஓ., விசாரணையில் திருமங்கலம் பிரதான கால்வாயின் 1 வது, கிளைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் பொதுப்பணித் துறை சார்பில்

கருமாத்தூர் : கருமாத்துார் அருகே கருகப்பிள்ளை கண்மாயில் மண் அள்ளும் இயந்திரத்துடன் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றினர்.

இதுகுறித்து கிராம மக்கள் உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி, ஆர்.டி.ஓ., ராஜ்குமார், செக்கானூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.ஆர்.டி.ஓ., விசாரணையில் திருமங்கலம் பிரதான கால்வாயின் 1 வது, கிளைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் பொதுப்பணித் துறை சார்பில் நடப்பதாகவும், இதற்கு விக்கிரமங்கலம், கருகப்பிள்ளை, கொடிக்குளம் பெரிய, சிறிய கண்மாய்களில் தேவையான மண் எடுக்க பெரியாறு வைகை வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கடந்த மார்ச் 25 ல் அனுமதி கடிதம் கொடுத்ததும் தெரிந்தது. கிராம மக்கள் எதிர்ப்பால் பணியை நிறுத்திவைக்க ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X