பொது செய்தி

தமிழ்நாடு

நெல் வயல்களில் பச்சைப் பாசியா.. மயில் துத்தம் பயன்படுத்தலாம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மதுரை : நெல் வயல்களில் பச்சைப்பாசி அதிகம் வளர்ந்திருந்தால் 10 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் மயில்துத்தம் கரைத்து கட்டுப்படுத்தலாம் என விவசாய இணை இயக்குனர் விவேகானந்தன் கூறினார்.கோடைகால தொழில்நுட்பம் குறித்து அவர் கூறியதாவது:செல்லம்பட்டி, மதுரை மேற்கு, மேலுார், திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லுாரில் 3000 எக்டேர் பரப்பளவில் கோடை பருவ நெல்

மதுரை : நெல் வயல்களில் பச்சைப்பாசி அதிகம் வளர்ந்திருந்தால் 10 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் மயில்துத்தம் கரைத்து கட்டுப்படுத்தலாம் என விவசாய இணை இயக்குனர் விவேகானந்தன் கூறினார்.

கோடைகால தொழில்நுட்பம் குறித்து அவர் கூறியதாவது:செல்லம்பட்டி, மதுரை மேற்கு, மேலுார், திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லுாரில் 3000 எக்டேர் பரப்பளவில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை 30 முதல் 60 நாட்கள் பயிராக உள்ளது. இந்த தட்பவெப்பத்தில் இலைப்பேன்கள் இலைச்சாற்றை உறிஞ்சுவதால் நுனி காய்ந்துவிடும்.

200 லிட்டர் தண்ணீரில் 40 கிராம் தயோமீத்தாக்ஸம் அல்லது பிப்ரோனில் 500 மில்லி கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும்.குருத்துப்பூச்சியின் புழுக்கள் தண்டில் துளையிட்டு உண்பதால் மணிகள் பால் பிடிக்காமல் சாவியாகி மகசூல் இழப்பு ஏற்படும். விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 2 சி.சி. அளவில் டிரைக்கோடெர்மா முட்டை ஒட்டுண்ணிகளை வளர்க்கலாம்.

இவை அந்துப்பூச்சிகளின் முட்டைகளை தின்றுவிடும். சேதம் அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் பிப்ரோனில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.நெல் வயல்களில் பச்சைப்பாசி வளர்ந்திருந்தால் நட்ட பத்து நாட்களுக்கு பிறகு 10 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் மயில் துத்தத்தை கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X