பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சாலைகளில் கொரோனா நெறிமுறை பின்பற்ற வலியுறுத்தல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மதுரை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவும் நிலையில் சிறு, குறுந்தொழிற்சாலைகளில் தமிழக சுகாதார துறையின் கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மடீட்சியா தலைவர் முருகானந்தம் வலியுறுத்தியுள்ளார்.அவர் கூறியதாவது: கடந்தாண்டு கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல்வேறு துன்பங்களை சந்தித்தோம். ஆகவே தற்போது வரும் முன் காப்போம் என்பதற்கு ஏற்ப

மதுரை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவும் நிலையில் சிறு, குறுந்தொழிற்சாலைகளில் தமிழக சுகாதார துறையின் கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மடீட்சியா தலைவர் முருகானந்தம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது: கடந்தாண்டு கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல்வேறு துன்பங்களை சந்தித்தோம். ஆகவே தற்போது வரும் முன் காப்போம் என்பதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். பணியாளர்கள் தினமும் உடல் வெப்பநிலை பரிசோதனை, மாஸ்க் அணிதல், கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டோர் விபரம், அதில் தடுப்பூசி செலுத்தியவர்கள் நபர்கள், சுகாதார துறை வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறதா போன்ற தகவல்களை தொழில் வணிக துறை இயக்ககம் கேட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும்விபரங்களை மடீட்சியாவிற்கு அனுப்ப வேண்டும்.

தொழிற்சாலைகளில் சுகாதார துறை ஆய்வாளர்கள் ஆய்வுக்கு வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்றால் அபராதம் விதிப்பர் அல்லது 'சீல்' வைப்பர். அதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X