போலீஸ் செய்திகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஏப் 09, 2021
Share
காளை வளர்ப்பவர் கொலைமதுரை: ஒத்தக்கடை அருகே அயிலாங்குடியைச் சேர்ந்தவர் அம்மாசி 46. ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வயல் பகுதியில் துாங்கியவரை மர்மநபர்கள் குத்திக்கொலை செய்தனர். பெண் தொடர்பால் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.'போக்சோ'வில் கைதுமதுரை: ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பஷீர்அகமதுகான் 64. அப்பகுதி 11 வயது சிறுமிக்கு

காளை வளர்ப்பவர் கொலை

மதுரை: ஒத்தக்கடை அருகே அயிலாங்குடியைச் சேர்ந்தவர் அம்மாசி 46. ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வயல் பகுதியில் துாங்கியவரை மர்மநபர்கள் குத்திக்கொலை செய்தனர். பெண் தொடர்பால் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

'போக்சோ'வில் கைது

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பஷீர்அகமதுகான் 64. அப்பகுதி 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 'போச்சோ' சட்டத்தின்கீழ் நகர் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கொசு மருந்தை குடித்து தற்கொலை

மதுரை: பழங்காநத்தம் நாகராஜன் 58. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மனஅழுத்தத்திற்குள்ளாகி கொசு விரட்டி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நகை பறிப்பு

மதுரை: வண்டியூர் லட்சுமிகாந்தம் 56. வீட்டின் முன் நின்றிருந்த போது அவ்வழியே வந்த 35 வயதுள்ள நபர் 2 பவுன் நகையை பறித்துச்சென்றார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

80-ஐ கற்பழித்த 50

சோழவந்தான்: வடகாடுபட்டி சவுந்தரபாண்டி 50. மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். பால் மாடு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்கிறார். இதே பகுதியில் தனியாக வசிக்கும் 80 வயது மூதாட்டியை இரவு வீடுபுகுந்து கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X