மதுரை : மதுரையில் மத்திய வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ.,) அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாக ஆர்.டி.ஓ., மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் லைசென்ஸ் வழங்குவது உள்ளிட்ட பணிகள் தேங்கி கிடக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன் வடக்கு அலுவலகத்தில் இருந்து மத்திய அலுவலகம் பிரிக்கப்பட்டது. இங்கு ஒரு ஆர்.டி.ஓ., மூன்று மோட்டார் ஆய்வாளர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் ஒரு ஆய்வாளர் மட்டுமே உள்ளார். வடக்கு ஆர்.டி.ஓ., செல்வம் இங்கு கூடுதல் பொறுப்பு வகித்தாலும் அவரால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.
இவ்வலுவலகத்திற்கு உட்பட்டு 17க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. அதிகாரிகள் இல்லாததால் பழகுனர், ஓட்டுநர் உரிமம், புதிய வாகன பதிவு, புதுப்பித்தல், பயிற்சி பள்ளிகளில் ஆய்வுஎன பல்வேறு பணிகள் தேங்கியுள்ளன.குறிப்பாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி காலம் முடித்தவர்களுக்கு உரிய நேரத்தில் பரிசோதனை நடக்கவில்லை.
பலர் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கும் உரிய நேரத்தில் லைசென்ஸ் கிடைப்பதில்லை. இதுகுறித்து அரசு போக்குவரத்து துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE