பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அவர்களுக்கு ஏன் சலுகை?

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆனந்த் வெங்கட், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 72 சதவீதம் மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. அப்படியென்றால், மீதமுள்ள, 28 சதவீதம் பேர், பெரிய புத்திசாலிகளா? 100க்கும் மேற்பட்ட, கி.மீ., கடந்து, சொந்த ஊருக்கு சென்று, ஓட்டு அளித்தோர் எல்லாம் முட்டாள்களா?என்ன
TN election 2021, Voting, Polling, தேர்தல், ஓட்டுப்பதிவு


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


ஆனந்த் வெங்கட், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 72 சதவீதம் மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. அப்படியென்றால், மீதமுள்ள, 28 சதவீதம் பேர், பெரிய புத்திசாலிகளா? 100க்கும் மேற்பட்ட, கி.மீ., கடந்து, சொந்த ஊருக்கு சென்று, ஓட்டு அளித்தோர் எல்லாம் முட்டாள்களா?

என்ன காரணத்தால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், வாக்காளர்கள் ஓட்டு அளிக்காமல் இருந்திருக்கின்றனர்? ஓட்டு அளிக்க பணம் கொடுப்பது குற்றம் தான். ஆனால் இவர்கள், பணம் தந்தால் கூட ஓட்டு அளிக்க மாட்டார்கள் என்று, தெளிவாகத் தெரிகிறது.

ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாத அரசியல்வாதிகள் மீது, நாம் கோபம் கொள்கிறோம். அதே போல, ஜனநாயகத்தை மதிக்காத குடிமகன்களை என்ன செய்வது? நாட்டில் எல்லாருக்குமே, 'ஆதார்' அட்டை வழங்கியாகி விட்டது. இனி வாக்காளர் விபரங்களை ரயில்வே, பேருந்து, விமான முன்பதிவு, 'சர்வருடன்' இணைக்க வேண்டும். அதை பயன்படுத்தி மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை வர வேண்டும்.ஓட்டளிக்காதோருக்கு, அரசு மானியமாக வழங்கும் தொகையை ரத்து செய்ய வேண்டும்.


latest tamil news


யாருக்கும் ஓட்டு அளிக்க விருப்பமில்லை என்றால், 'நோட்டா'விற்கு ஓட்டு அளிக்கலாம் என, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிடிவாதமாக, 'நான் ஓட்டு அளிக்கவே மாட்டேன்' என்றால், அவர்களுக்கு நம் நாட்டின் மீதோ, ஜனநாயகத்தின் மீதோ அக்கறையில்லை என, அர்த்தம்.பின் அவர்களுக்கு, அரசின் சலுகைகள் ஏன் கொடுக்கப்பட வேண்டும்?அவர்கள் ஓட்டு அளிக்காமல் இருப்பதால், தவறான நபர்கள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க துணை போகின்றனர் என்று அர்த்தம்.

தேர்தலில் பங்கு கொள்ளாமல் இருப்பது, சுதந்திரம் அல்ல; ஒரு வகையில் தேசத் துரோகம் என்றே கருத வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர், தேர்தல். அதில் பங்கேற்காமல் இருப்போர், தண்டிக்கப்பட வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஏப்-202123:56:44 IST Report Abuse
Pugazh V அர்த்தமற்றதாக.இருக்கிறது. இந்த கேஸ்களைப் பரிசீலிக்க வும் : 1.ஹைதராபாத் தில் பணி. அங்கே தேர்தல் இல்லை. ஈரோட்டில் வாக்கு. சட்டப்படி 6 ஆம் தேதி மட்டும் ஸ்பீஸல் லீவ் தருவார்கள். வாக்களித்ததாக.போலிங் ஆபீசரின் சான்றிதழ் காட்ட வேண்டும். விமானம்/ ரயில்/பஸ்ஸில் வந்து போவதற்கு வசதியில்லை. கூட ரெண்டு நாள் லீவ் எடுத்தால் லாஸ் ஆஃப் பே. 2. 65 & 60 வயதானவர்கள் மட்டுமே தனியாக வசிக்கிறார்கள். பூத் நடந்து செல்லும் தொலைவில் இல்லை. ஆட்டோவிற்குத் தரும் அளவு வசதியில்லை. இவர்கள் பெறும் அரசு சலுகைகளை நிறுத்த வேண்டுமா?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
09-ஏப்-202122:57:47 IST Report Abuse
M  Ramachandran கொராணா பயம் காரணமாகஓட்டுச்சாவடிக்கு சிலர் வராமல் இருக்கலாம். ஏனென்றால் அரசடியால் காட்சிகள் இந்த கடுமையான காலங்களில் கூட கூட்டத்தை சேர்கிறார்களே யன்றி முக கவசம், இடைவெளி பற்றி எள்ளளலாவும் சிந்திக்காமல். எல்ல அரசியல் கட்சிகளுமே நடக்கின்றன. அதன் பயம் காரணமாகஇந்தஹ முறை சிலர் ஒதுங்கி இருக்கக்கூடும்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-ஏப்-202121:23:17 IST Report Abuse
g.s,rajan மேலும் எந்த வேட்பாளரையும் தேர்ந்து எடுக்க வாக்காளர்கள் விரும்பவில்லை என்றால் அதை ரகசியமாக தெரியப்படுத்த வோட்டிங் மெஷினில் வழி செய்ய வேண்டியது மிக மிக அவசியம் நாற்பத்தியொன்பது ஓ பிரிவில் வாக்களிக்கும் உரிமையை நிராகரிக்க வாக்காளர்கள் தங்களின் வெறுப்பை ரகசியமாக வெளிப்படுத்த உரிய வழிவகையை தேர்தல் ஆணையம் காண வேண்டும் .எல்லாருமே மோசம் என்றால் வெறுத்து ஒதுக்க வாக்காளர்களுக்கு நிச்சயம் உரிமை உள்ளது, ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X