தமிழ்நாடு

ஒவ்வொரு யூனியனுக்கும் ஒரு நெல் அறுவடை இயந்திரம் தேவை!

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் தண்ணீர் பாசனத்தை கணக்கில் கொண்டே விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை துவங்குகின்றனர். அதேசமயம் அறுவடையும் ஒரே நேரத்தில் துவங்குவதால் இயந்திரம் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.கள்ளந்திரி வரை இரு போகமும், மேலுார் பகுதியில் ஒரு போகமும் நெல் விவசாயம் நடக்கிறது. அறுவடை வரை ஓடியாடி வேலை செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு இயந்திரத்தை தேடி தேடி
ஒவ்வொரு யூனியனுக்கும் ஒரு நெல் அறுவடை இயந்திரம் தேவை!

மதுரை : மதுரை மாவட்டத்தில் தண்ணீர் பாசனத்தை கணக்கில் கொண்டே விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை துவங்குகின்றனர். அதேசமயம் அறுவடையும் ஒரே நேரத்தில் துவங்குவதால் இயந்திரம் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

கள்ளந்திரி வரை இரு போகமும், மேலுார் பகுதியில் ஒரு போகமும் நெல் விவசாயம் நடக்கிறது. அறுவடை வரை ஓடியாடி வேலை செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு இயந்திரத்தை தேடி தேடி தவிக்கின்றனர். ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நெற்கதிர்களை அறுத்து விடலாம். இதற்கு ரூ.3000 வரை இயந்திரம் வைத்திருப்பவர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர்.

சில நேரங்களில் வேண்டுமென்று ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் என இழுத்து கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்கின்றனர். சில இடங்களில் கட்டணம் கொடுக்க தயாராக இருந்தாலும் இயந்திரம் வாடகைக்கு கிடைப்பதில்லை.வேளாண் பொறியியல் துறை மற்றும் கூட்டுறவு துறையின் இயந்திரங்கள் மாவட்டம் முழுமைக்கும் ஈடுசெய்ய முடியாது.

சில நேரங்களில் பராமரிப்பு, பழுது பிரச்னை வருகிறது. பார்த்து பார்த்து பத்திரமாக வளர்த்த விவசாயிகள் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பது தான் வேதனையின் உச்சம்.நல்ல காய்ந்த நிலையில் நெற்கதிர்களை அறுத்தால் தான் கதிர்கள் உடையாமல் கிடைக்கும். அறுவடையின் போது மழை பெய்தால் அனைத்தும் வீணாகி விடும். அறுவடை இயந்திரம், லாரியுடன் ரூ.20 லட்சம் வரை செலவாகும்.

அறுவடைக்காக மட்டும் சிறு, குறு விவசாயிகளால் இவ்வளவு பணத்தைமுதலீடு செய்ய முடியாது. விவசாய உற்பத்தி குழுக்களுக்கு இயந்திரம் வாங்க மானியம் கொடுப்பதாக கூறினாலும் பாதியளவு பணம் விவசாயிகள் தான் செலுத்த வேண்டும்.

பட்டணம் விவசாயி அஜித்குமார் கூறியதாவது: இன்ஜினியரிங் முடித்து விட்டு ஆர்வம் காரணமாக 5 ஏக்கரில் 3 ஏக்கர் வரை இயற்கை நெல் விவசாயம் செய்கிறேன். நெல் விதைத்த 20ம் நாள் கடலை புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு தலா 10 கிலோ வீதம் துாவுகிறேன். 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை துாவி விவசாயம் செய்கிறேன்.

இவ்வளவு செலவு செய்தும் ஜனவரி மழையால் அறுவடை பாழானது. யூனியனுக்கு ஒரு அறுவடை இயந்திரம் வாங்கி வைத்தால் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடலாம். அறுவடை கூலியும் குறையும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X