அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு ஏன்? வேட்பாளர்களிடம் விசாரணை

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
சென்னை: 'தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்' என, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று விசாரணை நடத்தினார்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட்ட தொகுதிகளில், குறைந்த சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதி களில், அதிக சதவீதத்தில் ஓட்டுகள்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை: 'தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்' என, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று விசாரணை நடத்தினார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட்ட தொகுதிகளில், குறைந்த சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதி களில், அதிக சதவீதத்தில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக, சென்னையில் ஓட்டு சதவீதம் குறைந்திருப்பது, தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆலோசனை வழங்கிய நிறுவன நிர்வாகிகளிடம், தேர்தல் அன்று, ஸ்டாலின் விசாரணை நடத்தினார்.

'பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி, தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்' என, அந்நிறுவனத்தினர், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஓட்டு சதவீதம் குறைந்தது, தி.மு.க., தலைமைக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், நேற்று சென்னை அறிவாலயத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த, தி.மு.க., வேட்பாளர்கள் சிலரை அழைத்து ஸ்டாலின் பேசினார்.


latest tamil news



அவர்களிடம், 'ஓட்டு சதவீதம் குறைந்தது ஏன்' என்பதற்கான காரணங்களை கேட்டறிந்தார். 'சீட்' கிடைக்காத ஏமாற்றத்தால், தேர்தல் பணிகள் செய்யாமல் ஒதுங்கியிருந்த அதிருப்தியாளர்கள் யார் யார் என்ற பட்டியலையும் கேட்டுள்ளார். அவர்கள் மீது, ஓட்டு எண்ணிக்கைக்கு பின், நடவடிக்கை பாயும் வாய்ப்பு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-ஏப்-202120:56:09 IST Report Abuse
bal வோட்டு போடாத சென்னை மக்களுக்கு தண்ணீர் கொடுக்காதீர். மின்சாரம் தராதீர்..ரோடுகள் போடாதீர். நாறனும்.
Rate this:
Cancel
ntgk - Chennai,இந்தியா
09-ஏப்-202119:30:30 IST Report Abuse
ntgk பி.கே வுக்கு ஒரு ராசி. ஒரு முறை ஜெயித்து கொடுப்பார் மற்றோரு முறை காலை வாரி விடுவார். முதல் முறை பிஜேபி 2014 ஜெயிக்க வைத்தார், பிறகு காங்கிரஸ் தோற்க செய்தார். அடுத்த முறை நிதிஷ் குமார் ஐ ஜெயிக்க வைத்தார், அவரையே அடுத்த முறை தோற்க வைத்தார். கடைசியாக பஞ்சாபில் அம்ரிந்தர் சிங்க்கை ஜெயிக்க வைத்தார். அப்படியானால் DMK நிலைமை என்னவாகும்?
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
09-ஏப்-202119:06:32 IST Report Abuse
Poongavoor Raghupathy ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அறுபது சதவிகிதம் எடப்பாடி தொகுதியில் எண்பது சதவிகிதம் என்ன சொல்லுகிறது என்றால் இடப்படிதான் மக்களுக்கு அதிக தேவை என்று தெரிகிறது. முடிவு என்னவென்றால் ஸ்டாலின் ஜெயிப்பது இல்லை என்றும் அதிமுக அதிக நூற்றி நாற்பது இடங்களுடன் ஆட்சியை மூன்றாவது முறையாக பிடிக்க போகிறார் என்று நன்றாக தெரிகிறது. ராமரை செருப்பால் அடித்த கட்சிக்கு தற்சமயம் பாடம் கடவுள் கற்பிப்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X