ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு ஏன்? வேட்பாளர்களிடம் விசாரணை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு ஏன்? வேட்பாளர்களிடம் விசாரணை

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (82)
Share
சென்னை: 'தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்' என, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று விசாரணை நடத்தினார்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட்ட தொகுதிகளில், குறைந்த சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதி களில், அதிக சதவீதத்தில் ஓட்டுகள்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை: 'தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்' என, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் ஸ்டாலின், நேற்று விசாரணை நடத்தினார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட்ட தொகுதிகளில், குறைந்த சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதி களில், அதிக சதவீதத்தில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக, சென்னையில் ஓட்டு சதவீதம் குறைந்திருப்பது, தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆலோசனை வழங்கிய நிறுவன நிர்வாகிகளிடம், தேர்தல் அன்று, ஸ்டாலின் விசாரணை நடத்தினார்.

'பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி, தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்' என, அந்நிறுவனத்தினர், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஓட்டு சதவீதம் குறைந்தது, தி.மு.க., தலைமைக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், நேற்று சென்னை அறிவாலயத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த, தி.மு.க., வேட்பாளர்கள் சிலரை அழைத்து ஸ்டாலின் பேசினார்.


latest tamil news



அவர்களிடம், 'ஓட்டு சதவீதம் குறைந்தது ஏன்' என்பதற்கான காரணங்களை கேட்டறிந்தார். 'சீட்' கிடைக்காத ஏமாற்றத்தால், தேர்தல் பணிகள் செய்யாமல் ஒதுங்கியிருந்த அதிருப்தியாளர்கள் யார் யார் என்ற பட்டியலையும் கேட்டுள்ளார். அவர்கள் மீது, ஓட்டு எண்ணிக்கைக்கு பின், நடவடிக்கை பாயும் வாய்ப்பு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X