வேட்பாளரின் உறவினர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு| Dinamalar

வேட்பாளரின் உறவினர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Added : ஏப் 09, 2021
Share
திருக்கனுார்; மண்ணாடிப்பட்டில் தி.மு.க., வேட்பாளரின் உறவினர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மண்ணாடிப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த வர் முரளிதரன், 37; மண்ணாடிப்பட்டு தொகுதி தி.மு.க., வேட்பாளர் குமாரின் உறவினர். இவரது காரை வீட்டின் எதிரே சாலையோரம் நிறுத்தியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு

திருக்கனுார்; மண்ணாடிப்பட்டில் தி.மு.க., வேட்பாளரின் உறவினர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மண்ணாடிப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த வர் முரளிதரன், 37; மண்ணாடிப்பட்டு தொகுதி தி.மு.க., வேட்பாளர் குமாரின் உறவினர். இவரது காரை வீட்டின் எதிரே சாலையோரம் நிறுத்தியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் தீப்பிடித்து எரிந்தது.இதைக்கண்ட அவரது உறவினர்கள் தீப்பிடித்து எரிந்த காரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் காரின் முன், பின்பக்க பகுதிகள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சென்று விசாரித்தினர். தீப்பிடித்து எரிந்த காரை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.முரளிதரன் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X