பொது செய்தி

இந்தியா

கஜா புயலில் தரை தட்டிய கப்பலை உடைக்கும் பணி தீவிரம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
காரைக்கால்; காரைக்காலில் கஜா புயலின் போது கரை ஒதுங்கிய கப்பல் மூன்று ஆண்டுகளுக்கு பின் கப்பலை உடைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வாஞ்சூர் தனியார் துறைமுகத்தை ஆழப்படுத்த மும்பையிலிருந்து மெர்சேட்டர் லைன்ஸ் நிறுவனத்தின் வீராபிரேம் என்ற அதிநவீன இயந்திர கப்பல் வந்தது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி கஜா புயல் கோர தாண்டவத்தில்
 கஜா புயலில் தரை தட்டிய  கப்பலை உடைக்கும் பணி தீவிரம்

காரைக்கால்; காரைக்காலில் கஜா புயலின் போது கரை ஒதுங்கிய கப்பல் மூன்று ஆண்டுகளுக்கு பின் கப்பலை உடைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வாஞ்சூர் தனியார் துறைமுகத்தை ஆழப்படுத்த மும்பையிலிருந்து மெர்சேட்டர் லைன்ஸ் நிறுவனத்தின் வீராபிரேம் என்ற அதிநவீன இயந்திர கப்பல் வந்தது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி கஜா புயல் கோர தாண்டவத்தில் கடலில் நிறுத்தப்பட்ட கப்பல் வடக்கு வாஞ்சூர் கடற்கரையில் தரைதட்டி நின்றது. கப்பலில் இருந்த 25 பேர் உயிர் பிழைத்தனர்.சுமார் 9640 டன் எடையுடன் 124 மீட்டர் நீளம், 23 மீட்டர் அகலமுள்ள கப்பலின் அடித்தளத்தில் ஓட்டை விழுந்ததால் கடல்நீர் சூழ்ந்தது. கப்பலை மீட்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந் தது. இதனால் கப்பலில் இருந்த 250 மெட்ரிக்டன் ஆயில் வெளியேற்றப் பட்டது.கப்பலில் இருந்த ஆயிலை வெளியேற்றியதால் உயிரி னங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் கப்பலை அப்புறப்படுத்த மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கப்பலை வெளியில் எடுக்க முடியாததால் கப்பலை உடைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இயந்திரங்கள் மூலம் கப்பலை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X