தெரு மின்விளக்குகளை இயக்கும் சுவிட்ச் பழுது | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தெரு மின்விளக்குகளை இயக்கும் சுவிட்ச் பழுது 

Added : ஏப் 09, 2021
Share
திருக்கனுார்; திருக்கனுார் வணிகர் வீதியில் மின்விளக்குகளை இயக்கும் சுவிட்ச் சேதமடைந்துள்ளதால் வியாபாரிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.திருக்கனுார் வணிகர் வீதி, பள்ளி வாசல் வீதி, பிள்ளையார் கோவில் பகுதிகளில் மெடிக்கல் கிளினிக் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் அமைந்துள்ளன.இப்பகுதியில் திருக்கனுார் மின் துறை இளநிலை பொறியாளர் அலுவலகம் மூலம் 10க்கும்

திருக்கனுார்; திருக்கனுார் வணிகர் வீதியில் மின்விளக்குகளை இயக்கும் சுவிட்ச் சேதமடைந்துள்ளதால் வியாபாரிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.திருக்கனுார் வணிகர் வீதி, பள்ளி வாசல் வீதி, பிள்ளையார் கோவில் பகுதிகளில் மெடிக்கல் கிளினிக் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் அமைந்துள்ளன.இப்பகுதியில் திருக்கனுார் மின் துறை இளநிலை பொறியாளர் அலுவலகம் மூலம் 10க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் மற்றும் மெர்குரி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த விளக்குகளை இயக்கும் சுவிட்ச் போர்டு ஒரு மாதத்திற்கு முன் சேதமடைந்தது. மின்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இரவு நேரங்களில் சுவிட்ச் பழுது காரணமாக தெருமின் விளக்குகளை இயக்க முடியாததால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், மெடிக்கல் கிளினிக் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.பழுதடைந்துள்ள வணிகர் வீதி தெரு விளக்குகளை இயக்கும் சுவிட்ச் போர்டை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X