பணத்தை வீசி சென்ற மூன்று பேருக்கு வலை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி; பணத்தை வீசிவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினர் கடந்த 5 ம் தேதி இரவு 8 மணியளவில் குயவர்பாளையம் டி.ஆர்.நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நின்றிருந்த 3 பேர் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் வைத்திருந்த பணத்தை சாலையில் வீசி தப்பியோடினர். அதில் ரூ.27

புதுச்சேரி; பணத்தை வீசிவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினர் கடந்த 5 ம் தேதி இரவு 8 மணியளவில் குயவர்பாளையம் டி.ஆர்.நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நின்றிருந்த 3 பேர் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் வைத்திருந்த பணத்தை சாலையில் வீசி தப்பியோடினர். அதில் ரூ.27 ஆயிரத்து 500 இருந்தது. அந்த பணம் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்ய கொண்டு வந்தது தெரிந்தது.பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். புதுச்சேரி கோர்ட் அனுமதி பெற்று பணத்தை வீசி தப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X