பொது செய்தி

இந்தியா

சாலையில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி; சாலையில் கிடந்த ரூ. 38 ஆயிரம் கண்காணிப்பு கேமரா உதவியால் உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.புதுச்சேரி சாரத்தை சேர்ந்தவர் கணேஷ், 42; இவர் கடந்த 24ம் தேதி மிஷன் வீதியில் கீழே கிடந்த ரூ.38 ஆயிரத்தை கண்டெடுத்து பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். பணத்தின் உரிமையாளர் யார் என விசாரித்தனர்.சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் பணம் கண்டெடுக்கப்பட்ட

புதுச்சேரி; சாலையில் கிடந்த ரூ. 38 ஆயிரம் கண்காணிப்பு கேமரா உதவியால் உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.புதுச்சேரி சாரத்தை சேர்ந்தவர் கணேஷ், 42; இவர் கடந்த 24ம் தேதி மிஷன் வீதியில் கீழே கிடந்த ரூ.38 ஆயிரத்தை கண்டெடுத்து பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். பணத்தின் உரிமையாளர் யார் என விசாரித்தனர்.சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் பணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது ஒருவரது பைக்கில் இருந்து பணப்பை கீழே விழுந்தது தெரிந்தது. அவரது பைக் எண்ணை வைத்து விசாரித்த போது, புதுச்சேரி வீதியில் வசிக்கும் வியாபாரி சையது ஹூசைனுக்கு சொந்தமானது என தெரிந்தது. நேற்று பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை வரவழைத்த போலீசார் இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை கண்டெடுத்து நேர்மையாக ஒப்படைத்த சாரம் கணேஷிற்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X