புதுச்சேரி; பொய் வழக்கு போட்டதை திரும்ப பெற கூறி அ.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கர் ஆதரவாளர்கள் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சம்பத் ஆதரவாளரான, பாரதி மில் திட்டு சந்திரசேகரன் 40; இவர் கடந்த 6ம் தேதி வரதராஜ பெருமாள் கோவில் பிரமனாள் வீதி மெயின் ரோட்டில் மாலை 6.45 மணியளவில் நின்றிருந்த போது, அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., வினர் அவரிடம் தகராறு செய்து தாக்கினர். அவரது பிரசார ஆட்டோவையும் சேதப்படுத்தினர். தடுத்த அவரது தாயார் கஸ்துாரியை 64; யை தள்ளிவிட்டனர்.இதை கண்டித்தும், அ.தி.மு.க.,வினர் மீது நட வடிக்கை எடுக்க கோரியும் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து கஸ்துாரி கொடுத்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை அ.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கர், வேங்கைசெல்வம், சதீஷ், சந்தோஷ், வேலு பிரபா, சந்திரன், தீபன் உட்பட 30 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் அ.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கர், தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொய் வழக்கை வாபஸ் பெற கோரி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.இதனால் கடலுார்-புதுச்சேரி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வேட்பாளர் பாஸ்கரிடம் போலீசார் பேசினர். அங்கு வந்த அ.தி.மு.க., மாநில அமைப்பாளர் அன்பழன் முதலியார்பேட்டை போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். வழக்கை திரும்ப பெறுவதாக போலீசார் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் முதலியார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE