பொது செய்தி

இந்தியா

ஆட்டோ டிரைவர்களுக்கு தடுப்பூசி3 நாள் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி; கொரோனா தடுப்பூசி யின் அவசியம் தொடர்பாக, ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன், சுகாதாரத் துறை செயலர் அருண் நேற்று ஆலோசனை நடத்தினார்.சுகாதாரத் துறை செயலர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது, தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அருண் விளக்கினார்.ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அவர்களின்

புதுச்சேரி; கொரோனா தடுப்பூசி யின் அவசியம் தொடர்பாக, ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன், சுகாதாரத் துறை செயலர் அருண் நேற்று ஆலோசனை நடத்தினார்.சுகாதாரத் துறை செயலர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது, தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அருண் விளக்கினார்.ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக, வரும் 14ம் தேதியன்று அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 15, 16 ஆகிய தேதிகளில் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனை, மண்ணாடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனையில் நடக்கும் சிறப்பு முகாம்களில் 45 வயதிற்கு மேற்பட்ட ஆட்டோ டிரைவர் கள், அவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொள்ள சுகாதாரத் துறை செயலர் அறிவுரை வழங்கினார்.பின், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஸ்டிக்கரை சுகாதாரத் துறை செயலர் அருண் வெளியிட, ஆட்டோ டிரைவர்கள் சங்க நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். புதுச்சேரி சுகாதார இயக்ககத்தின் இயக்குனர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X