பொது செய்தி

இந்தியா

கைவினை கிராமத்தில் கவர்னர் தமிழிசை ஆய்வு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்; நோணாங்குப்பம் படகு குழாமை பார்வையிட்ட கவர்னர் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தை பார்வையிட்டார். அங்குள்ள பல்வேறு அரங்குகள், கைவினை பொருட்கள், மற்றும் விற்பனை நிலவரம் குறித்து அலுவலர்கள், ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,

அரியாங்குப்பம்; நோணாங்குப்பம் படகு குழாமை பார்வையிட்ட கவர்னர் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தை பார்வையிட்டார். அங்குள்ள பல்வேறு அரங்குகள், கைவினை பொருட்கள், மற்றும் விற்பனை நிலவரம் குறித்து அலுவலர்கள், ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க புதுச்சேரி மாநில வருவாயை கூட்டவும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு சுற்றுலா படகு குழாமிற்கு சென்று, அதிகாரிகளுடன் சுற்றுலா படகில் சவாரி சென்று கடற்கரை பகுதியை பார்வையிட்டார்.கடற்கரை பகுதியில் அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய வசதி களை ஏற்படுத்துவது, சுற் றுலா வருவாயை மேம் படுத்துவது குறித்து ஆலோ சித்தார். சுற்றுலா படகு குழாமில் பணி புரியும் ஊழியர்கள் சம்பள பாக்கி குறித்து கவர்னரிடம் முறையிட்டனர். இவர்களின் குறைகளை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கூறினார். சுற்றுலாத்துறை செயலர் அருண், கவர்னரின் ஆலோசகர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X