புதுச்சேரி; கொரோனா தடுப்பு பணிகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனங்களை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.வில்லியனுார், குயவர் பாளையம், மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை, லாஸ் பேட்டை பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து, தடுப்பூசி செலுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்த 6 ஆம்புலன்ஸ்களை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.ராஜ்நிவாஸ் எதிரில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த் பிரகாஷ் மகேஷ்வரி, சுகாதாரத் துறை செயலர் அருண், இயக்குனர் மோகன்குமார், புதுச்சேரி சுகாதார இயக்ககத்தின் இயக்குனர் ஸ்ரீராமுலு பங்கேற்றனர்.கவர்னர் அளித்த பேட்டி:மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தொற்றை கண்டறிய ரேபிட் ஆண்டி ஜென், ஆர்டி - பி.சி.ஆர்., பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE