கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

Added : ஏப் 09, 2021
Share
புதுச்சேரி; கொரோனா தடுப்பு பணிகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனங்களை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.வில்லியனுார், குயவர் பாளையம், மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை, லாஸ் பேட்டை பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து, தடுப்பூசி செலுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்த 6 ஆம்புலன்ஸ்களை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று

புதுச்சேரி; கொரோனா தடுப்பு பணிகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனங்களை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.வில்லியனுார், குயவர் பாளையம், மேட்டுப்பாளையம், ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை, லாஸ் பேட்டை பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து, தடுப்பூசி செலுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்த 6 ஆம்புலன்ஸ்களை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.ராஜ்நிவாஸ் எதிரில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த் பிரகாஷ் மகேஷ்வரி, சுகாதாரத் துறை செயலர் அருண், இயக்குனர் மோகன்குமார், புதுச்சேரி சுகாதார இயக்ககத்தின் இயக்குனர் ஸ்ரீராமுலு பங்கேற்றனர்.கவர்னர் அளித்த பேட்டி:மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தொற்றை கண்டறிய ரேபிட் ஆண்டி ஜென், ஆர்டி - பி.சி.ஆர்., பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X