தேர்தல் பணியில் ஊழியர்கள் அசத்தல் தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் பாராட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்தல் பணியில் ஊழியர்கள் அசத்தல் தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் பாராட்டு

Added : ஏப் 09, 2021
Share
புதுச்சேரி; தேர்தல் பணியில் பெருமைப்படத்தக்க வகையில் சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது செய்திக் குறிப்பு:சட்டசபை தேர்தல் அசம்பாவிதமின்றி அமைதியாக நடந்து முடிந்தது. மக்கள் அமைதியாக, புதுச்சேரி மாவட்டத்தில், அமைக்கப்பட்ட 1324 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டளித்தனர். அவர்களுக்கு எனது

புதுச்சேரி; தேர்தல் பணியில் பெருமைப்படத்தக்க வகையில் சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது செய்திக் குறிப்பு:சட்டசபை தேர்தல் அசம்பாவிதமின்றி அமைதியாக நடந்து முடிந்தது. மக்கள் அமைதியாக, புதுச்சேரி மாவட்டத்தில், அமைக்கப்பட்ட 1324 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டளித்தனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் முற்றிலும் மகளிரைக் கொண்டு செயல்படும் ஒரு அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடி உருவாக்கப்பட்டது.இந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 5349 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 2338 பெண் ஊழியர்கள். இது 44 சதவீதமாகும். பெண் ஊழியர்கள் பல சிரமங்களையும் எதிர்கொண்டு உறுதியோடு, பெருமைப்படத்தக்க வகையில் தங்களது பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டது இதுவே முதல்முறையாகும். தங்களது சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் தேர்தல் பணியில் பெருமைப்படத்தக்க வகை யில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் குறிப்பாக அனைத்து பெண் ஊழியர்களுக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X