கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் அமல்| Dinamalar

இந்தியா

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் அமல்

Added : ஏப் 09, 2021
Share
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். பஸ்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஆலோசனை கூட்டம்
 கொரோனா பரவலை கட்டுப்படுத்த  புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் அமல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். பஸ்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஆலோசனை கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் நேற்று நடந்தது.

தலைமை செயலர் அஸ்வனிகுமார், சுகாதாரத் துறை செயலர் அருண், இயக்குனர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது. முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் தான் நிரப்பப்பட வேண்டும். விழாக்களை நடத்தும்போது அடுத்த இருக்கை காலியாக வைக்கும்படி 50 சதவீதம் கூட்டம் இருத்தல் வேண்டும். கடைகள், மால்கள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்க வேண்டும். பொது இடங்களில் அதிக மக்கள் கூடும் இடத்தில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இருக்கையில் இடைவெளிவிட்டு அமர வேண்டும். பஸ்களில் பயணிகள் நின்றவாறு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. நீச்சல் குளம் போன்ற இடங்களில் பயிற்சி பெறுவோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆட்டோக்களில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். அதிகமாக நோய்தொற்று கண்டறியப்படும் பகுதிகளில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். பிரதமர் கூறியதை போன்று வரும் 14ம் தேதி வரை புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X