என்.ஆர்.காங்., வேட்பாளரின் ஆதரவாளருக்கு மிரட்டல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி; திருபுவனை என்.ஆர். காங்., வேட்பாளர் கோபிகா வின் ஆதரவாளரை மிரட்டிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.திருபுவனை என்.ஆர்.காங்., வேட்பாளர் கோபிகா, அவரது ஆதரவாளர் மின்னல் கொடி, 31 ஆகியோர் கடந்த 6ம் தேதி மாலை 4.30 மணியளவில் திருபுவனை அரசு மேல் நிலைப்பள்ளி ஓட்டுச் சாவடி மையத்திற்கு ஆய்வுக்கு சென்றனர்.அப்போது சுயேட்சை வேட்பாளர் அங்காளன் ஆதரவாளர்கள் கோபிகாவின்

புதுச்சேரி; திருபுவனை என்.ஆர். காங்., வேட்பாளர் கோபிகா வின் ஆதரவாளரை மிரட்டிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.திருபுவனை என்.ஆர்.காங்., வேட்பாளர் கோபிகா, அவரது ஆதரவாளர் மின்னல் கொடி, 31 ஆகியோர் கடந்த 6ம் தேதி மாலை 4.30 மணியளவில் திருபுவனை அரசு மேல் நிலைப்பள்ளி ஓட்டுச் சாவடி மையத்திற்கு ஆய்வுக்கு சென்றனர்.அப்போது சுயேட்சை வேட்பாளர் அங்காளன் ஆதரவாளர்கள் கோபிகாவின் ஆதரவாளர் மின்னல் கொடியை திட்டி, உள்ளே போகவிடாமல் தடுத்தனர். மேலும் மின்னல்கொடி, அவரது கணவர் இளையராஜாவை கொலை செய்து புதைத்துவிடுவோம் என மிரட்டினர்.இது குறித்து மின்னல் கொடி கொடுத்த புகாரின்பேரில் கரிகாலன், 40;, வெங்கடாஜலபதி, 48; கார்த்திக், 43; வினோத், 31; உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X