வி.வி.பேட் மீது பொய் குற்றச்சாட்டை கூறி டெஸ்ட் ஓட்டளித்த வாக்காளர் மீது புகார்| Dinamalar

வி.வி.பேட் மீது பொய் குற்றச்சாட்டை கூறி டெஸ்ட் ஓட்டளித்த வாக்காளர் மீது புகார்

Added : ஏப் 09, 2021
Share
புதுச்சேரி; வி.வி.பேட் இயந்திரம் மீது பொய் குற்றச்சாட்டை கூறி டெஸ்ட் ஓட்டளித்தவர் மீது தேர்தல் துறை புகார் அளித்துள்ளது.தேர்தலன்று புதுச்சேரி மாநிலம் உழவர்கரை தொகுதி நகராட்சி திருமண மண்டப ஓட்டுச் சாவடியில் ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 10.35 மணியளவில் உழவர்கரை பேட் 4-வது குறுக்கு தெரு அந்தோணி பாஸ்கர், 25; ஓட்டளித்தார். அப்போது அவர், தான் யாருக்கு ஓட்டு போட்டேன் என வி.வி.,பேட்

புதுச்சேரி; வி.வி.பேட் இயந்திரம் மீது பொய் குற்றச்சாட்டை கூறி டெஸ்ட் ஓட்டளித்தவர் மீது தேர்தல் துறை புகார் அளித்துள்ளது.தேர்தலன்று புதுச்சேரி மாநிலம் உழவர்கரை தொகுதி நகராட்சி திருமண மண்டப ஓட்டுச் சாவடியில் ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 10.35 மணியளவில் உழவர்கரை பேட் 4-வது குறுக்கு தெரு அந்தோணி பாஸ்கர், 25; ஓட்டளித்தார். அப்போது அவர், தான் யாருக்கு ஓட்டு போட்டேன் என வி.வி.,பேட் இயந்திரம் காண்பிக்கவில்லை. எனவே இயந்திரத்தின் மீது சந்தேகம் உள்ளது என ஓட்டுச் சாவடி அதிகாரி மகிபால் சிங் சேஷாவாத்திடம் புகார் கூறினார்.மேலும் இந்திய தேர்தல் நடத்தும் விதிமுறை 49(எம்.ஏ.,) படி உறுதிமொழி கொடுத்து வி.வி.,பேட் நம்பகத் தன்மை மீது சந்தேகம் எழுப்பி டெஸ்ட் ஓட்டளிக்க தயார் என்றார். இதையடுத்து அனைத்து கட்சி பூத் ஏஜெண்ட்கள் முன்னிலையில் சவாலை நிருபிக்க மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் வி.வி.,பேட்டை சோதிக்க டெஸ்ட் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டார். அவர் யாருக்கு ஓட்டளித்தாரோ அதை வி.வி.,பேட் இயந்திரம் 7 வினாடிகளுக்கு காண்பித்து மறைந்தது.வி.வி.பேட் மீது பொய் குற்றச்சாட்டை கூறி டெஸ்ட் ஓட்டளித்த வாக்காளர் அந்தோணி பாஸ்கர் மீது தேர்தல் துறை ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்தோணி பாஸ்கர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 177 (பொய்யான தகவல் அளித்தல்) கீழ் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.அவர் போட்ட ஒரு டெஸ்ட் ஓட்டு, ஓட்டு எண்ணிக்கையின் போது கழிக்கப்படும். வி.வி.,பேட் மீது சந்தேகம் எழுப்பி நிருப்பிக்காமல் போனால் ஆறு மாத சிறை தண்டனை அல்லது ரூ. 1000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X