தமிழ்நாடு

3.61 லட்சம் பேர்:  மாவட்டத்தில் ஜனநாயக கடமையை ஆற்றத்தவறிய.. 7 சட்டசபை தொகுதிகளில் 78.62 சதவீதம் பதிவு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 191 பேர் தேர்தலில் ஓட்டுபோட வராததால், 78.62 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம் (தனி), வானுார் (தனி), திருக்கோவிலுார் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த ஏழு தொகுதிகளில் மொத்தம் 16 லட்சத்து 89 ஆயிரத்து 95
 3.61 லட்சம் பேர்:   மாவட்டத்தில் ஜனநாயக கடமையை ஆற்றத்தவறிய.. 7 சட்டசபை தொகுதிகளில் 78.62 சதவீதம் பதிவு

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 191 பேர் தேர்தலில் ஓட்டுபோட வராததால், 78.62 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம் (தனி), வானுார் (தனி), திருக்கோவிலுார் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த ஏழு தொகுதிகளில் மொத்தம் 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளர்கள் உள்ளனர். இதில், செஞ்சி தொகுதியில், 1,02,236 ஆண்களும், 1,02,236 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவர் என 78.41 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. மயிலம் தொகுதியில், 88 ஆயிரத்து 815 ஆண்களும், 86 ஆயிரத்து 367 பெண்கள், ஒரு மாற்றுத்திறனாளி மற்றும் ஒரு திருநங்கை உட்பட 1,75,183 பேர் ஓட்டுப்போட்டனர். திண்டிவனம் (தனி) தொகுதியில் 90 ஆயிரத்து 672 ஆண்களும், 90 ஆயிரத்து 135 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் உட்பட 1,80,809 பேர் பங்கேற்றதன் மூலம் 78.43 சதவீதம் அங்கு ஓட்டு பதிவாகியுள்ளது. வானுார் (தனி) தொகுதியில் 89 ஆயிரத்து 820 ஆண்களும், 90 ஆயிரத்து 944 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இருவர்கள் உட்பட 1,80,766 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு 79.79 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.விழுப்புரம் தொகுதியில் 1,00,242 ஆண்களும், 1,01,481 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உட்பட 2,01,726 பேர் ஒட்டளித்ததன் மூலம் 76.97 சதவீதம் ஓட்டுப்பதிவானது. விக்கிரவாண்டி தொகுதியில் 95 ஆயிரத்து 318 ஆண்களும், 95 ஆயிரத்து 646 பெண்கள், மூன்றாம் பாலிவத்தவர் மூன்று உட்பட 1,90,967 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இங்கு 81.39 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. திருக்கோவிலுார் தொகுதியில், 98 ஆயிரத்து 151 ஆண்களும், 95 ஆயிரத்து 806 பெண்கள் மற்றும் 11 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 1,93,968 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு 76.27 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது. மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும், மொத்தம் 13 லட்சத்து 27 ஆயிரத்து 904 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இதில், 3 லட்சத்து 61 ஆயிரத்து 191 பேர் தேர்தலில் ஓட்டு போடவில்லை. இதனால் மாவட்டத்தில் மொத்தம் 78.62 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் பதிவாகியுள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் விவசாயிகள் மட்டுமின்றி படித்த இளைஞர்கள், அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோர் என பலரும் உள்ளனர். இவர்களில் பலர், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் செயல்பாடுகள் பிடிக்காமல் இருக்கலாம். வெளியூரில் பணியாற்றும் பலர், கொரோனா மற்றும் லாக் டவுன் அச்சத்தால் ஓட்டுப்போட வராமல் இருந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X