விழுப்புரம் - விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில், வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு விளம்பரங்களை சுவற்றில் வரைந்து வருகின்றனர்.விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம், பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துஉள்ளது. இந்த அலுவலகத்திற்கு, தினந்தோறும் வாகன லைசென்ஸ் புதுப்பித்தல், பெயர் மாற்றம், புதிய வாகனங்களுக்கான எப்.சி., வாகன எண் பெறுதல் உட்பட சான்றுகளை பெறுவதற்காக பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம். இதையொட்டி, இந்த அலுவலகத்தை சுற்றியுள்ள சுவற்றில், வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு விளம்பரங்களை தீட்டும் பணி கடந்த, சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இதில், போதையில் வாகனங்களை ஓட்டுதல் கூடாது, சீட் பெல்ட் அணிதல், ெஹல்மெட் அணிவது உட்பட பல விழிப்புணர்வு படங்கள், வாசகங்கள் எழுதி சுவற்றை அழகாக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்த விழிப்புணர்வு விளம்பரங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மத்தி யில் வரவேற்பை பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE