பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் மார்க்கெட் கமிட்டிக்கு மணிலா வரத்து அதிகரிப்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
திண்டிவனம்- தொடர் விடுமுறைக்கு பிறகு, திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மணிலா வரத்து அதிகரித்துள்ளது.திண்டிவனத்திலுள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிக அளவில் மணிலா பயிர், உளுந்து உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. தற்போது மணிலா பயிர் சீசன் என்பதால், மார்க்கெட் கமிட்டிக்கு அதிக அளவில் தினந்தோறும்

திண்டிவனம்- தொடர் விடுமுறைக்கு பிறகு, திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மணிலா வரத்து அதிகரித்துள்ளது.திண்டிவனத்திலுள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிக அளவில் மணிலா பயிர், உளுந்து உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. தற்போது மணிலா பயிர் சீசன் என்பதால், மார்க்கெட் கமிட்டிக்கு அதிக அளவில் தினந்தோறும் விவசாயிகள் மூலம் மணிலா பயிர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றது.இந்நிலையில் கடந்த 2ம் தேதியிலிருந்து தொடர் விடுமுறை மற்றும் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு பிறகு , திண்டிவனம் மார்க்கெட் கமிட்டி நேற்று செயல்பட துவங்கியது. இதனால் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து நேற்று அதிக அளவில் மணிலா பயிர் கொண்டு வரப்பட்டது.இது பற்றி மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ''மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மட்டும் 500 மணிலா மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ''மணிலா பயிர் 80 கிலோ மூட்டை ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.6,500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது'' என்று தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X