வளவனுார் அருகே தகராறு 26 பேர் மீது வழக்குப் பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வளவனுார் அருகே தகராறு 26 பேர் மீது வழக்குப் பதிவு

Added : ஏப் 09, 2021
Share
விழுப்புரம் - விழுப்புரம் பகுதியில் தேர்தல் அன்று தகராறில் ஈடுபட்ட 26 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 2,368 பூத்களில் கடந்த 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது, தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதால் அரசியல் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது.விழுப்புரம் அருகே சகாதேவன்பேட்டை ஓட்டுச்சாவடி அருகே

விழுப்புரம் - விழுப்புரம் பகுதியில் தேர்தல் அன்று தகராறில் ஈடுபட்ட 26 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 2,368 பூத்களில் கடந்த 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது, தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதால் அரசியல் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது.விழுப்புரம் அருகே சகாதேவன்பேட்டை ஓட்டுச்சாவடி அருகே தகராறில் ஈடுபட்ட அ.தி.மு.க., கந்தன், குமரவேல், நாராயணசாமி, மணிவண்ணன், முருகன், லட்சுமணன், ரமேஷ், ராஜா, செல்வக்குமார், தி.மு.க., பாலமுருகன், சீனுவாசன், குமரன், செந்தில்குமார், மணிகண்டன், காசி, கார்த்தி, முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர். அதே போல், தொடர்ந்தனுார் பகுதியில் தகராறில் ஈடுபட்ட தி.மு.க., ஜெகநாதன், இன்பசேகரன், பிரபாகரன், சிவா, பார்த்திபன், விஸ்வநாதன் ஆகிய 6 பேர் மீதும், தாதம்பாளையம் கிராமத்தில் தகராறில் ஈடுபட்டதாக செல்லையன், அன்பரசன் ஆகியோர் மீதும், சின்னமடம் கிராமத்தில் தகராறில் ஈடுபட்டதாக தேவகுமார் என்பவர் மீதும் வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X