கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை முககவசம் அணியாதோருக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை முககவசம் அணியாதோருக்கு அபராதம்

Added : ஏப் 09, 2021
Share
விழுப்புரம் - கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் முககவசம் அணியாமல் சென்ற 23 பேருக்கு அபராதம் விதித்தனர். கொரோனா நோய் பரவலின் தாக்கம் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில், அதிகரித்து வருகிறது. இந்த நோயின் தாக்கத்தை தடுக்கும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு

விழுப்புரம் - கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் முககவசம் அணியாமல் சென்ற 23 பேருக்கு அபராதம் விதித்தனர். கொரோனா நோய் பரவலின் தாக்கம் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில், அதிகரித்து வருகிறது. இந்த நோயின் தாக்கத்தை தடுக்கும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையொட்டி,விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகே நகராட்சி நிர்வாகம், காவல் துறை இணைந்து, முககவசம் அணியாமல் வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோரை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, முககவசமின்றி சென்ற 23 பேரை நிறுத்தி தலா 200 ரூபாய் என மொத்தம், 4 ஆயிரத்து 600ரூபாயை அபராதமாக வசூலித்து எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X