பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் கழிவு நீர் குழாய் அமைக்கும் பணி தீவிரம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
திண்டிவனம்- திண்டிவனம்-புதுச்சேரி ரோட்டில் சாக்கடை நீர் செல்லும் வகையில், கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி நகராட்சி சார்பில் நடக்கின்றது. திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையப்பகுதியில், கழிவு நீர் செல்வதற்கு வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.குறிப்பக புதுச்சேரி பஸ்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள கடைகளிலிருந்து

திண்டிவனம்- திண்டிவனம்-புதுச்சேரி ரோட்டில் சாக்கடை நீர் செல்லும் வகையில், கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி நகராட்சி சார்பில் நடக்கின்றது. திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையப்பகுதியில், கழிவு நீர் செல்வதற்கு வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.குறிப்பக புதுச்சேரி பஸ்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாமல் ரோட்டில் தேங்கி நின்றதால், துர்நாற்றம் வீசி வந்தது. மேலும் கட்டண கழிப்பிடம் உள்ள இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நாற்றம் எடுத்து வந்தது. இதனால் புதுச்சேரி செல்லும் சாலையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து, நகராட்சி ஏற்பாட்டின் பேரில், திண்டிவனம் - புதுச்சேரி சாலையிலுள்ள தனியார் பெண்கள் மேல் நிலைப் பள்ளி நுழைவாயில் பகுதியிலிருந்து, மற்றோர் தனியார் பள்ளி நுழைவாயில் வரை, சாலையோரத்தில் கழிவு நீர் செல்லும் வகையில் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X