பிரசாரத்தில் முக கவசம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிட கோரிய மனு மீது மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷன் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் சில மாநில லோக்சபா இடைத் தேர்தல் மார்ச் 27ல் துவங்கி இம்மாதம் 29 வரை நடக்கிறது.
election campaign, mask, Supreme Court,உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிட கோரிய மனு மீது மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷன் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் சில மாநில லோக்சபா இடைத் தேர்தல் மார்ச் 27ல் துவங்கி இம்மாதம் 29 வரை நடக்கிறது. நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மேற்கு வங்கத்தில் இன்னும் ஐந்து கட்ட தேர்தல்கள் நடக்கவுள்ளன. தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் முக கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உத்தர பிரதேச முன்னாள் டி.ஜி.பி. விக்ரம் சிங், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


latest tamil news



அதன் விபரம்: சாமானிய மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதே நேரம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்தின் போது முக கவசம் அணிவதில்லை.அவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வலியுறுத்தி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-ஏப்-202122:21:23 IST Report Abuse
DARMHAR யாராக இருந்தாலும் உலகெங்கியும் பரவியுள்ள கரோனா காலத்தில் தனது தற்காப்புக்காகவும் பிறர் தற்காப்புக்காகவும் முக கவசம் அணியாமல் வீட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது என்பது தான் விதிமுறை.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
09-ஏப்-202120:53:07 IST Report Abuse
bal பிரச்சாரத்தின்போது தமிழ் நாட்டில் எவனும் முகக்கவசம் அணியவில்லை எல்லோரும் கூட்டம் கூட்டமாக போனார்கள். அப்போது இல்லாத கண்டிப்பு இப்போது வருகிறது...ஏன் இப்படி மக்களை ஏமாற்றுகிறீர்கள்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-ஏப்-202109:54:57 IST Report Abuse
S.Baliah Seer எல்லா இடங்களுக்கும் முக கவசம் பொருந்தாது.மருத்துவமும் மற்றும் அதை சார்ந்த பகுதிகளிலும் முக கவசம் போட்டால் போதுமானது. உடல் வெப்ப பரிசோதனை செய்கிறார்கள்.அதையும் தாண்டி ஜுரம் இல்லாமல் கூட கொரோனா இருக்கும் என்கிறார்கள். முதலில் புனா கிருமி சோதனை மையம் ஒரு வரைமுறையைத் தெரிவிக்கட்டும்.தயவு செய்து ஆளாளுக்கு மக்களை டார்ச்சர் செய்யாதீர்கள். அன்றாடம் காய்ச்சிகள் நிலையை கனிவுடன் பாருங்கள். அவர்கள் வெளியில் சென்றால்தான் போஜனம். ராமதாஸ் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஐயாயிரம் அபராதம் போடவேண்டும் என்கிறார்..தெலுங்கானா முதல்வர் ஆயிரம் ரூபாய் அபராதம் என்கிறார். பொதுமக்கள் கோடி கோடியாகவா கொள்ளையடிக்கிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X