திண்டிவனம் - டாடா ஏஸ் வாகனம் விடுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் நல்லியகோடான் நகரை சேர்ந்தவர் ஏழுமலை, 42; இவரது தம்பி அருண், 35; இருவரும் எதிர் எதிர் வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஏழுமலை, வழக்கம் போல் தனது மினி லாரியை வீட்டிற்கு எதிரில் நிறுத்தியுள்ளார்.அப்போது எனது வீட்டின் எதிரில் ஏன் வண்டியை விடுகிறார் என அருண் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண், அவரது அக்காள் பாக்கியலட்சுமி 40; ஆகிய இருவரும், ஏழுமலையை தாக்கினர். தடுக்கவந்த அவரது மனைவி சுமதியையும் தாக்கினர்.இதில் படுகாயமடைந்த ஏழுமலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் அருண், பாக்கியலட்சுமி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE