சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து பெண்ணிடம் ரூ. 3.5லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சின்னசேலம் - சின்னசேலம் அருகே வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள தாலிச் செயின் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன், 48; விவசாயி; இவரது மனைவி கவுரி, 44; இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் நிவேதாவுக்கு

சின்னசேலம் - சின்னசேலம் அருகே வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள தாலிச் செயின் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன், 48; விவசாயி; இவரது மனைவி கவுரி, 44; இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் நிவேதாவுக்கு திருமணமாகி விழுப்புரத்தில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார். தேர்தலுக்கு கனியாமூருக்கு வந்த நிவேதா நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் துாங்கியுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் முன்பக்கமாக புகுந்த மர்ம நபர்கள், நிவேதா கழுத்திலிருந்த 5 பவுன் தாலி செயின், 3 பவுன் செயின் மற்றும் பீரோவிலிருந்த 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர். சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது நகை மற்றும் பணம் திருடுபோனது தெரியவந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ராமநாதன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் - இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் நேரில் சென்று விசாரனை நடத்தி, கனியாமூர் கைகாட்டியிலுள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் தடவியல் நிபுணர் ராஜவேல் சம்பவ இடத்திற்கு சென்று சுவர், கதவு, பீரோ ஆகியவற்றில் கைரேகை உள்ளதா என்று ஆய்வு செய்தார்.இதேபோல் கடந்த சில மாதங்களாக கனியாமூர், மேலுார், சிறுவத்துார், பூண்டி, எலவடி உள்ளிட்ட கிராமங்களில் அடுத்தடுத்த திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போதே, இது போன்ற கொள்ளை சம்பவங்கள் நடப்பது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X