சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை தாக்கிய கணவர் தற்கொலை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
விழுப்புரம் - கோட்டக்குப்பத்தில் மனைவியை தாக்கியதால் அச்சமடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.கோட்டக்குப்பம், பழைய பட்டினபாதை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் புகழேந்தன்,32; ஆசாரி. நேற்று முன்தினம் புகழேந்தன் தனது குழந்தை அழுததால், உன்னால் பார்த்து கொள்ள முடியாதா எனக்கூறி, மனைவி தீபாவை கோபத்தில் தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார் உடன் புகழேந்தன்

விழுப்புரம் - கோட்டக்குப்பத்தில் மனைவியை தாக்கியதால் அச்சமடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.கோட்டக்குப்பம், பழைய பட்டினபாதை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் புகழேந்தன்,32; ஆசாரி. நேற்று முன்தினம் புகழேந்தன் தனது குழந்தை அழுததால், உன்னால் பார்த்து கொள்ள முடியாதா எனக்கூறி, மனைவி தீபாவை கோபத்தில் தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார் உடன் புகழேந்தன் பெற்றோர்கள் தீபாவை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மனைவிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த புகழேந்தன் வீட்டில் துாக்கு போட்டு கொண்டார். அங்கிருந்த சிலர் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்ததை உறுதி செய்தனர். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X