கிணற்றில் விழுந்து வாலிபர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்து வாலிபர் தற்கொலை

Added : ஏப் 09, 2021
Share
விக்கிரவாண்டி- விக்கிரவாண்டி அருகே கிணற்றில் விழுந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிபாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவரது விவசாய கிணற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விக்கிரவாண்டி சப்- இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் பொதுமக்கள்

விக்கிரவாண்டி- விக்கிரவாண்டி அருகே கிணற்றில் விழுந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிபாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவரது விவசாய கிணற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விக்கிரவாண்டி சப்- இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டு விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்தவர் பொய்யப்பாக்கம் கிராமம், மாதா கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் நடராஜன் ,30: எனவும் கடந்த 6 ம் தேதி அன்று ஓட்டு போட்டு விட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை எனவும் தெரியவந்தது. புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X