சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை - உளுந்துார்பேட்டை அருகே கார் வேன் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் அஜீத் 32. இவர் நண்பர்களுடன் செங்கல்பட்டிலிருந்து திருச்சி நோக்கி( டிஎன் 01, ஏஎப். 4334 )என்ற பதிவெண் கொண்ட காரில் சென்றார். நேற்று காலை, 7:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் புற வழிச்சாலையில் கார் சென்ற

உளுந்துார்பேட்டை - உளுந்துார்பேட்டை அருகே கார் வேன் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் அஜீத் 32. இவர் நண்பர்களுடன் செங்கல்பட்டிலிருந்து திருச்சி நோக்கி( டிஎன் 01, ஏஎப். 4334 )என்ற பதிவெண் கொண்ட காரில் சென்றார். நேற்று காலை, 7:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் புற வழிச்சாலையில் கார் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியன் கட்டையில் மோதி எதிர்திசையில், எடப்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற (டிஎன். 20, சிபி. 4925) பதிவெண் கொண்ட டெம்போ டிராவல் வேன் மீது கார் மோதியது. இதில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வேனில் பயணித்த எடப்பாடியைச் சேர்ந்த ரவி, 45, கண்ணன், 42, அலாவுதீன், 30; மற்றும் கார் டிரைவர் அஜீத் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்துார் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X