சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் மீது பைக் மோதி விபத்தில் வாலிபர் பலி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சின்னசேலம் - சின்னசேலம் அருகே டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில், வாலிபர் இறந்தார். கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, பனையந்துார் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ரமேஷ்,27; இவர் தலைவாசல் அடுத்த வி.கூட்ரோடு பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இவரது சித்தப்பா மகள் கலா,18; மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை

சின்னசேலம் - சின்னசேலம் அருகே டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில், வாலிபர் இறந்தார். கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, பனையந்துார் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ரமேஷ்,27; இவர் தலைவாசல் அடுத்த வி.கூட்ரோடு பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இவரது சித்தப்பா மகள் கலா,18; மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை வி.கூட்ரோட்டிலிருந்து தங்களது வீட்டிற்கு, சேலம் - விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது காளசமுத்திரம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருக்கும் போது, எதிர் திசையில் டிஎன் 46 பி 8120 என்ற பதிவெண் கொண்ட டிராக்டரை அதன் ஓட்டுனர் திடீரென அதிவேகமாக ஓட்டி வந்து, எந்த சிக்னலும் செய்யாமல் திடீரென திருப்பியதால், எதிர்பாராத விதமாக பைக் டிராக்டர் மீது மோதியது. இதில் ராமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் படுகாயமடைந்த கலா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் விசாரனை செய்துவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X