பொது செய்தி

தமிழ்நாடு

புகைப்படம் இல்லாத பூத் சிலிப்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சட்டசபை தேர்தலையொட்டி வழங்கப்பட்ட பூத் சிலிப்பில் வாக்காளர்களின் புகைப்படம் இல்லாததால் அதிகளவு கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளன.தேர்தலின் போது, கடந்த காலங்களில் அரசியல் கட்சியினர் தங்களது சின்னத்துடன் கூடிய பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு வழங்கினர்.இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் அரசு அலுவலர்கள் மூலம் முன்கூட்டிய வாக்காளர்களுக்கு பூத் சிலிப்

சட்டசபை தேர்தலையொட்டி வழங்கப்பட்ட பூத் சிலிப்பில் வாக்காளர்களின் புகைப்படம் இல்லாததால் அதிகளவு கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளன.தேர்தலின் போது, கடந்த காலங்களில் அரசியல் கட்சியினர் தங்களது சின்னத்துடன் கூடிய பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு வழங்கினர்.இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் அரசு அலுவலர்கள் மூலம் முன்கூட்டிய வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படுகிறது. அதில், வாக்காளரின் புகைப்படம், பெயர், முகவரி, பாலினம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.வாக்காளர்கள் தங்களது பூத் சிலிப்பினையும், அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினையும், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் காண்பித்து ஓட்டளித்துவந்தனர்.இந்நிலையில், தற்போதைய சட்டசபை தேர்தலுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பில் வாக்காளர்களின் புகைப்படம் இல்லை.தேர்தலின் போது காலை நேரத்தில் வாக்காளர்கள் காண்பித்த அடையாள அட்டையில் உள்ள புகைப்படமும், வாக்காளர்கள் பட்டியலில் உள்ள புகைப்படமும் பொருந்துகிறதா என பார்த்த ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், குறிப்பிட்ட கால நேரத்திற்கு பிறகு சரியாக பார்க்கவில்லை.குறிப்பாக ஒரு சிலபூத்களில் இயந்திரங்கள் பழுதாகியதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதை சரிசெய்ய வாக்காளர்களின் பூத்சிலிப் மற்றும் பட்டியலில் உள்ள பெயரை மட்டும் பார்த்து உடனடி அனுமதிவழங்கப்பட்டுள்ளது.இதை சாதகமாக பயன்படுத்திய அரசியல்கட்சியினர் ஓட்டுச்சாவடி முகவர்கள் வெளியூர்களில் தங்கியுள்ளவர்களுக்கு பதிலாக, வேறு ஆட்கள் மூலம் ஓட்டுப்பதிவுசெய்துள்ளனர்.இதனால் அனைத்து தொகுதிகளிலும் அதிகளவு கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது
-நமதுநிருபர்-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X