தமிழ்நாடு

கட்டாயம்: மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்...முழுவீச்சில் துவக்கிட கலெக்டர் உத்தரவு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் துவக்கிடுவதற்கு அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்திடுவதற்காக கலெக்டர் கிரண்குராலா தலைமையில்
 கட்டாயம்:  மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்...முழுவீச்சில் துவக்கிட கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் துவக்கிடுவதற்கு அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்திடுவதற்காக கலெக்டர் கிரண்குராலா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி டி.ஆர்.ஓ., விஜய்பாபு, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், திருக்கோவிலுார் ஆர்.டி,ஓ,. சாய்வர்த்தினி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி டீன் உஷா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையாளர் குமரன் உள்ளிட்ட அனைத்துத் துறை உயரதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.கொரோனா தடுப்பு வழிகாட்டுதலாக தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும், அரசு மருத்துவர்கள், தாசில்தார்கள், பி.டி.ஓ.,க்கள், நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பினர் ஆகியோர் கடைபிடித்து நடைமுறைப்படுத்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.மேலும் ஏற்கனவே செயல்பட்டது போல் அனைத்து கிராமப்புறங்களிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்திட வேண்டும். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய கட்டுப்பாடுகளை கட்டாயப்படுத்திட வேண்டும். அரசு கலைக்கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரிகளை மருத்துவ சிகிச்சை மையங்களாக மாற்றிட வேண்டும். நடைமுறைகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களை நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து கண்டிப்பாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்.மேலும் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்தி வரும் கள்ளக்குறிச்சி சுகாதாரப்பணிகள் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் கிரண்குராலா பாராட்டு தெரிவித்தார். அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடுமையாக்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் மாவட்ட நோய் தடுப்பு மருத்துவ அலுவலர் சிவக்குமார், அரசு மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, டாக்டர் பழமலை, உதவி திட்ட அலுவலர் ரத்தினமாலா, ஊராட்சிகள் துணை இயக்குனர் மஞ்சுளா, தாசில்தார்கள் பிரபாகரன், சையத்காதர், குமரன், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை பி.டி.ஓ.,க்கள், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X