பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலையத்தில் சாலை சேதம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
விருத்தாசலம் - விருத்தாசலம் பஸ் நிலைய முகப்பு சாலை சேதமடைந்ததால், டிரைவர்கள் பயணிகள் அவதியடைகின்றனர்.சென்னை - ஜெயங்கொண்டம், திருச்சி - கடலுார், சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக தினமும் அரசு, தனியார் என 150க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்குகின்றன. சுற்றியுள்ள 5,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைகின்றனர்.பஸ்கள் வெளியே செல்லும் நுழைவு

விருத்தாசலம் - விருத்தாசலம் பஸ் நிலைய முகப்பு சாலை சேதமடைந்ததால், டிரைவர்கள் பயணிகள் அவதியடைகின்றனர்.சென்னை - ஜெயங்கொண்டம், திருச்சி - கடலுார், சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக தினமும் அரசு, தனியார் என 150க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்குகின்றன. சுற்றியுள்ள 5,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைகின்றனர்.பஸ்கள் வெளியே செல்லும் நுழைவு வாயிலில் சாலை சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கடந்து செல்வதற்குள் பஸ்கள் குலுங்கி, ஒருபுறம் சாய்ந்து செல்கிறது. இதனால் டிரைவர்கள், பயணிகள் அச்சமடைகின்றனர்.பஸ்களில் அச்சு முறிதல், டயர் பழுதாவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, பஸ் நிலைய நுழைவு வாயிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X