சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு பணம் ஒருவர் மீது வழக்கு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு - சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர் மீது நீதிபதி அனுமதி பெற்று போலீசார் வழக்குப் பதிந்தனர்.புவனகிரி சட்டசபை தொகுதி கீழ்வளையமாதேவி ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஒருவர், கடந்த 6ம் தேதி குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடும்படி கூறி பணம் விநியோகம் செய்துள்ளார்.அப்போது அவரை, கடலுார் அதிரடிப்படை பிரிவு சப்

சேத்தியாத்தோப்பு - சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர் மீது நீதிபதி அனுமதி பெற்று போலீசார் வழக்குப் பதிந்தனர்.புவனகிரி சட்டசபை தொகுதி கீழ்வளையமாதேவி ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஒருவர், கடந்த 6ம் தேதி குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடும்படி கூறி பணம் விநியோகம் செய்துள்ளார்.அப்போது அவரை, கடலுார் அதிரடிப்படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் கையும் களவுமாக பிடித்தார்.விசாரணையில், விருத்தாசலம் அடுத்த மணலுாரைச் சேர்ந்த கார்த்திகேயன், 47; என தெரியவந்தது.இது குறித்து சிதம்பரம், எண்.1 மாஜிஸ்திரேட் பரத்குமாரிடம் அனுமதி பெற்று கார்த்திகேயன் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X