கடலுார் - கடலுார் மாவட்டத்தில் 4,98,883 பேர் ஓட்டுப்போடவில்லை, நகர பகுதிகளை விட கிராமங்களில் அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன.கடலுார் மாவட்டத்தில் 10,57,478 ஆண், 10,89,569 பெண், 248 மூன்றாம் பாலினத்தவர் என, 21,47,295 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த 6ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் கடலுார் மாவட்டத்தில் 76.77 சதவீதம் ஓட்டுகள்பதிவானது.இதில், ஆண்கள் 8,05,415, பெண்கள் 8,42,909, மூன்றாம் பாலினத்தவர் 88, என, 16,48,412 பேர் ஓட்டு போட்டுள்ளனர்.எஞ்சியுள்ள 4,98,883 பேர் ஓட்டு போடவில்லை. 248 மூன்றாம் பாலினத்தவர்களில் 88 பேர் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர். திட்டக்குடி தொகுதியில் 23.70, விருத்தாசலம் 22.98, நெய்வேலி 25.75 பண்ருட்டி 20.39, கடலுார் 25.23, குறிஞ்சிப்பாடி 17.94, புவனகிரி 21.43, சிதம்பரம் 28.07, காட்டுமன்னார்கோவில் 23.90 சதவீதம் என, மொத்தம் 23.23 சதவீதம் பேர் ஓட்டு போடவில்லை.இதில், சிதம்பரத்தில் 28.07 சதவீதத்தினரும், அடுத்து நெய்வேலி, கடலுாரில் 25 சதவீதத்தினரும் (நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள்) ஓட்டுபோடவில்லை. ஆனால், கிராமங்களை மட்டுமே உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய இரு தொகுதிகளில் அதிகமானோர் ஆர்வமுடன் ஓட்டளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE