கடலுார் - கடலுார் மஞ்சக்குப்பத்தில் பாதாள சாக்கடை மேன்ேஹால் உள் வாங்கியதால் விபத்து அபாயம் உள்ளது.கடலுார், மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெரு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தெருவின் வளைவில் பாதாள சாக்கடை மேன்ேஹால் உள் வாங்கியுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இதே நிலை நீடிப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வழியாக பைக்கில் செல்வோர் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.குறிப்பாக, சாலையோரம் ஒதுங்கிச் செல்லும் போது, பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதால் விபத்துகள் நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனியாவது மேன்ேஹாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE