கடலுார் - கடலுார் ராகவேந்திரா மெடிக்கலில் நாளை சர்க்கரை வியாதிக்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே உள்ள ராகவேந்திரா மெடிக்கலில் நாளை 10ம் தேதி சர்க்கரை வியாதிக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் காலை 6:30 மணி முதல், மதியம் 2:00 மணி வரை நடக்கிறது.உணவுக்கு முந்தைய பரிசோதனையும், உணவுக்கு பிந்தைய பரிசோதனையும் செய்யப்படுகிறது. சிறப்பு மருத்துவர் வெங்கடேஷ்குமார் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கிறார்.5 நாட்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா குறித்த பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்யும் 50 பேருக்கு மட்டுமே அனுமதி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE