பொது செய்தி

தமிழ்நாடு

அரசு டவுன் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
பெண்ணாடம்- திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை இயக்கிய, அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்டக்குடி பணிமனையில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை (தடம் எண்.7) டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதனால், பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு,

பெண்ணாடம்- திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை இயக்கிய, அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்டக்குடி பணிமனையில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை (தடம் எண்.7) டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதனால், பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், புதுப்பாளையம், தெத்தேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், இந்த டவுன் பஸ் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டதால் இப்பகுதி மக்கள் பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் 5 கி.மீ., துாரம் உள்ள பெண்ணாடம் வந்து, அங்கிருந்து திட்டக்குடி, விருத்தாசலம் உட்பட பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால், இரு மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.எனவே, செம்பேரிக்கு மீண்டும் டவுன் பஸ் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X