சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எடைபோடும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
விருத்தாசலம் - விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் எடைபோடும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு, விருத்தாசலம், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் விளை பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.வேளாண் பொருட்களை எடைபோடும்

விருத்தாசலம் - விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் எடைபோடும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு, விருத்தாசலம், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் விளை பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.வேளாண் பொருட்களை எடைபோடும் பணியில், தினசரி 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு, மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் கடந்த நான்கு நாட்களாக ஊதியம் வழங்காததால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று எடைபோடும் பணியை புறக்கணித்தனர்.இதனால், நேற்று நெல், வேர்க்கடலை உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களைக் கொண்டு வந்த விவசாயிகள் கடும் அவதியடைந்தனர்.ஆத்திரமடைந்த விவசாயிகள், காலை 7:00 மணியளவில் மார்க்கெட் கமிட்டி எதிரே விருத்தாசலம் - கடலுார் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில்ஈடுபட்டனர்.தகலறிந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் 7:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X