பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அன்று இரு தரப்பினர் மோதல் காட்டுமன்னார்கோவிலில் சமாதான கூட்டம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் - காட்டுமன்னார்கோவில் அருகே இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவியதால் சமாதான கூட்டம் நடந்தது.காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி அரசு பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் கடந்த 6ம் தேதி ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தில் பா.ம.க., - வி.சி., கட்சியினருக்கிடையே தகராறு ஏற்பட்டது.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ

காட்டுமன்னார்கோவில் - காட்டுமன்னார்கோவில் அருகே இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவியதால் சமாதான கூட்டம் நடந்தது.காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி அரசு பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் கடந்த 6ம் தேதி ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தில் பா.ம.க., - வி.சி., கட்சியினருக்கிடையே தகராறு ஏற்பட்டது.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இருப்பினும் அப்பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து, சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி போலீஸ் தரப்பில் தாசில்தாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.அதன்பேரில் நேற்று காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் ராமதாஸ் தலைமையில் டி.எஸ்.பி., சுந்தரம், மண்டல துணை தாசில்தார் அன்பரசன், இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பா.ம.க., தரப்பில் ஒன்றிய செயலாளர் ராஜேஷ், வி.சி., தரப்பில் பசுமைவளவன், மா.கம்யூ., பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், இரு தரப்பினரும் வரும் காலங்களில் பிரச்னை ஏற்படாது என உறுதியளித்தனர்.அதிகாரிகள் தரப்பில், இனி பிரச்னை ஏதும் இன்றி சுமூகமாக செல்ல வேண்டும் என எழுதி கையெழுத்து பெற்றுக் கொண்டனர். மீறி பிரச்னை ஏற்படுமாயின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X