தமிழ்நாடு

அச்சம்- கொரோனாவுடன் டெங்கு பரவுவதால் மக்கள்...மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை அவசியம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கடலுார்- கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் பரவத் துவங்கியுள்ளதால், போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கையை அரசு துரிதப்படுத்த வேண்டும்.உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தொற்று, கடந்த 3 மாதங்களாக ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், இரண்டு வாரங்களாக கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் உலக நாடுகளை
 அச்சம்- கொரோனாவுடன் டெங்கு பரவுவதால் மக்கள்...மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை அவசியம்

கடலுார்- கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் பரவத் துவங்கியுள்ளதால், போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கையை அரசு துரிதப்படுத்த வேண்டும்.

உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தொற்று, கடந்த 3 மாதங்களாக ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், இரண்டு வாரங்களாக கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கடலுார் மாவட்டத்தில் ஒற்றை இலக்க எண்ணிற்கு குறைந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு வாரமாக இரண்டாவது அலையில் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மாவட்டம் முழுதும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு, அதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.ஒரு புறம் கொரோனா வேகமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சலும் பரவி மாவட்ட மக்களை அச்சுறுத்தத் துவங்கியுள்ளது.

வழக்கமாக ஜூலை மாதத்திற்குப் பிறகே பரவும் டெங்கு காய்ச்சல், சமீப காலமாக ஆண்டு முழுதும் பரவி வருகிறது. மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முகாமில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.அப்போது ஒரு சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் வடலுார் அடுத்த கருங்குழி பகுதியைச் சேர்ந்த 21 வயது வாலிபர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ரத்த மாதிரி எடுத்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று திண்டுக்கல்லில் வேலை பார்த்து வந்த கடலுாரைச் சேர்ந்த 25 வயது வாலிபருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், தற்போது 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துவதோடு, டெங்கு பாதிப்பைத் தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.கொசு ஒழிப்பாளர்கள் மூலம் மருந்து தெளிக்க ஏற்பாடு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், பொதுமக்களும் தங்களது சுற்றுப்புறத்தினை துாய்மையாக பராமரித்தல், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X