பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ.18 லட்சம் அபராதம் வசூல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கடலுார் - கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்டம் முழுதும் முகக் கவசம் அணியாதவர்களிடம் கடந்த 6 மாதத்தில் 18 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா

கடலுார் - கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்டம் முழுதும் முகக் கவசம் அணியாதவர்களிடம் கடந்த 6 மாதத்தில் 18 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கடலுார் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் முதல் 2021 மார்ச் வரையிலான 6 மாதங்களில் முகக் கவசம் அணியாதவர்களிடம் மாவட்டம் முழுதும் 18 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, போலீசார், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், சுகாதாரத்துறை மட்டுமே 6 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க அபராத நடவடிக்கையோடு, மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X