சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி மான் பலி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் - காட்டுமன்னார்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் இறந்தது.காட்டுமன்னார்கோவில், வீராணம் ஏரிக்கரையின் மேற்கில் உள்ள வனப்பகுதியில் இருந்து நேற்று காலை உணவு தேடி, வெள்ளியங்கால் ஓடை, வார சந்தை அருகே வந்த 2 வயதுடைய புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, மான் உடலைக் கைப்பற்றி

காட்டுமன்னார்கோவில் - காட்டுமன்னார்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் இறந்தது.காட்டுமன்னார்கோவில், வீராணம் ஏரிக்கரையின் மேற்கில் உள்ள வனப்பகுதியில் இருந்து நேற்று காலை உணவு தேடி, வெள்ளியங்கால் ஓடை, வார சந்தை அருகே வந்த 2 வயதுடைய புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, மான் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, பிச்சாவரம் வனப்பகுதியில் புதைத்தனர்.மற்றொரு மான் காயம்மாமங்கலம் கிராமத்தில் உள்ள ஓடைக் கரையில், ஒன்றரை வயதுடைய பெண் மான், காலில் ஏற்பட்ட காயத்தால் படுத்த நிலையில் கிடந்தது.தகவலறிந்த வனத்துறையினர் நேரில் சென்று மானை மீட்டு சேத்தியாத்தோப்பு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். சிகிச்சை முடிந்து வேப்பூர் வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X