சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆறாக ஓடும் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர்- சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எப்போது?

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் - படப்பை அருகே காரணிதாங்கலில், நெடுஞ்சாலையில் தேங்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவு நீரால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த காரணிதாங்கல் பகுதியில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 1,600 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சேகரமாகும் கழிவு நீரை

ஸ்ரீபெரும்புதுார் - படப்பை அருகே காரணிதாங்கலில், நெடுஞ்சாலையில் தேங்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கழிவு நீரால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த காரணிதாங்கல் பகுதியில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 1,600 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சேகரமாகும் கழிவு நீரை சுத்திகரித்து, பயன்படுத்தி கொள்ள வேண்டும்.ஆனால், கழிவு நீரை மறுசுழற்சி செய்யாமல், குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீர், அருகே உள்ள செரப்பணஞ்சேரி ஏரியில் கலந்து, ஏரி நீர் மாசடைந்தது. அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஏரிக்கு செல்லும் கால்வாய் அடைக்கப்பட்டது.கால்வாய் அடைக்கப்பட்டதால், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மிகக் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கழிவு நீரை சுத்திகரித்து, அவற்றை செடிகளுக்கு பயன்படுத்தி கொள்வதாக, அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய தனியார் நிறுவனம், விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தாமல் வெளியேற்றுகிறது.இந்த கழிவு நீர், ஆண்டு முழுதும், நெடுஞ்சாலையில் குட்டைபோல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இரவில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், கழிவு நீரால் விபத்தில் சிக்குகின்றனர். நெடுஞ்சாலையில் கழிவு நீர் தேங்காமல் இருக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அடுக்குமாடி குடியிருப்பில், கழிவு நீரை வெளியேற்ற பயன்படுத்தப்பட்ட டீசல் மோட்டாரை பறிமுதல் செய்து, ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதை அடுத்து, கழிவு நீர் வெளியேற்றப்படவில்லை. தற்போது, புகார் வந்துள்ளதால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.வட்டார வளர்ச்சி அலுவலர், குன்றத்துார்.உடனடி நடவடிக்கை தேவைஇது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:தனியார் கட்டுமான நிறுவனம், 2,000 குடும்பங்கள் தங்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்பை கட்டி, விற்று, கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியுள்ளது. ஆனால், கழிவு நீர் சுத்திகரிக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டுமான நிறுவனம், மூன்று ஆண்டுகள், இந்த அடுக்குமாடி குடியிருப்பை பாராமரித்து, பின், குடியிருப்பு சங்கங்களிடம் பராமரிப்பை ஒப்படைத்து, சென்று விட்டது.கட்டுமான நிறுவனம் மூலம் கழிவு நீரை வெளியேற்ற, நான்கு கழிவு நீர் அகற்றும் லாரிகள் வாங்கப்பட்டு, நான்கு குடியிருப்பு நலச்சங்கங்களிடம் வழங்கப்பட்டுள்ளன.இந்த அடுக்குமாடி கட்டடத்தில் வீடு வாங்கியோர், 'மெயின்டன்ஸ்' என்ற பெயரில், ஆயிரக்கணக்கான ரூபாயை, பராமரிப்பு செலவுக்காக, நலச்சங்களிடம் வழங்குகின்றனர்.எனினும், லாரிக்கான டீசல், ஓட்டுனர் சம்பளம், பராமரிப்பு செலவை குடியிருப்பு நல சங்கங்களே பார்த்து கொள்ள வேண்டும் என்பதால், கழிவு நீர் அகற்றும் லாரி பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் நிரம்பி வெளியேறி, நெடுஞ்சாலையில் ஆண்டு முழுதும் தேங்கி நிற்கிறது. எங்கு தவறு நடக்கிறது, இப்பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு, அதற்கான தீர்வு என்ன என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X